சமூக வலைத்தளங்களில் ஏமாற்றப்பட்டு 18 லட்சம் ரூபாவை பறிகொடுத்த ஐந்து பேர்!!

பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக சமூக வலைத்தள மோசடியாளர்களுக்கு 5 பேர், 1.8 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.பரிசுப் பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக குறித்த மோசடியாளர்களின் வங்கிக் கணக்கில் அவர்கள் பணத்தை வைப்பிட்டுள்ளதாக, தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதென அதன் தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொஷான் சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.முகநூல், வட்சப், வைபர் முதலான சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பராக அறிமுகமாகும் மோசடியாளர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து சமூக வலைத்தள பாவனையாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்