வேலை தேடுகின்றீர்களா……? WhatsApp-ல் பணிபுரிய ஓர் வாய்ப்பு!!

பிரபல சமூக வலைத்தள சற்றிங் செயலியான WhatsApp-ன் இந்திய பிரிவு நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.WhatsApp-ன் இந்திய நிறுவனத்தில் இருக்கும் உற்பத்தி பிரிவு, விளம்பர மேற்பார்வை பிரிவுகளில் இணைந்து பணிபுரிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

உலகளவில் சுமார் 1 பில்லியன் பயனர்களை கொண்டிருக்கும் WhatsApp ஆனது ஆண்டிற்கு சுமார் 200 மில்லியன் வருவாய் ஈட்டிவருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக உருமாறியுள்ள WhatsApp நிறுவனத்தின் வர்தக பிரவிற்கான ஆட்சேர்ப்பு பணி நடைப்பெற்று வருவதாக WhatsApp தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

சமீபத்தில் UPI அடிப்படையில் மொபைல் எண்களுக்கு இடையே பயனர்கள் பண பரிவர்த்தனை மேற்க்கொள்ளம் வசதியினை பெற்றப்பின் தற்போது WhatsApp-ன் சேவையானது பெருமளவு பாதுகாப்பு கோட்பாடுகளை நாடி வருகிறது. எனவே இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வைகையிலும் தங்களது சந்தையினை தக்கவைத்துக் கொள்ளவும் WhatsApp முயற்சிகள் பல மேற்கொண்டு வருகிறது. அந்த வகையினில் தற்போது நடைப்பெறும் ஆட்சேர்ப்பு மூலம் WhatsApp-கான மனித வளத்தினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் அதிகாரிக்கு தேவைப்படும் தகுதிகளாக WhatsApp தெரிவித்துள்ளதாவது… WhatsApp தயாரிப்புகளில் அதிக அனுபவம் இருப்பதை காட்டிலும், தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ள நபரினை WhatsApp தேடி வருகிறது. மேலும் பண பரிவர்தனை துறைகளில் 5 வருட அனுபவும் இருத்தல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரி மும்பையில் இருந்த தினமும் கலிபோர்னியாவில் இருக்கும் WhatsApp தலைமை நிர்வாக அதிகாரிக்கு தினசரி தகவல்களை அளிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்