சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

சுகாதார அமைச்சின் (Ministry of Health) உயிரியல் மருத்துவவியலாளர் (Bio medical technician) கற்கைநெறிக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கைநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் பின்வருமாறு

1)கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6 பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
2)கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் குறைந்தது மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
3) விண்ணப்பிக்கும் நபர் 18-30 வயது எல்லைக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்

*மேலதிக தெளிவான விபரங்களை அறிய கீழே உள்ள இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பார்க்கவும். தொழிற்தகைமை கட்டாயம் அவசியமானது இல்லை. பெற்றிருப்பது மேலதிக தகைமையாக கருதப்படும்.

*இந்த கற்கைநெறி ஒருவருடகால பயிற்சிகாலத்தை கொண்டது. கற்கைநெறியிற்கு உள்வாங்கப்படும் மாணவர்கள் அனைவரும் பயிற்சியின் பின்னர் நிரந்தர வேலையில் இணைத்து கொள்ள படுவார்கள்.

*கற்கைநெறி காலத்தில் மாத வருமானம் Rs 33,000/- வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் மாத வருமானம் 57,550/-+Government allowance வழங்கப்படும். விண்ணப்ப முடிவு திகதி 16.04.2018 ஆகும். பயிற்சியின் பின்னர் வைத்தியசாலைகளில் உயிரியல் மருத்துவவியலாளராக பணியாற்ற வேண்டும்.

*இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்… 30 வயதுக்கு உட்பட்ட எந்த வருடத்திலாவது கணித பிரிவில் சித்தி பெற்ற அனைவரும் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். இந்த கற்கைநெறி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 16.03.2018 இல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலை பார்க்கவும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்