பங்குனி உத்தர தினத்தில் தின்பண்டங்களுடன் நாகதம்பிரான் ஆலயத்திற்கு வந்த மாட்டு வண்டில்கள்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்குரிய பண்டங்கள் சேகரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள்  ஆலயத்தை வந்தடைந்தன.வருடந்தோறும் பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்கு எட்டு நாட்களுக்கு முன் விளக்கு வைக்கும் நிகழ்வு இடம்பெற்று பொங்கலுக்கான பண்டங்களை சேகரிக்கும் மாட்டு வண்டிகள் யாழ்ப்பாணம் புத்தூர் நோக்கிப் புறப்படும்.அவ்வாறு புறப்படும் மாட்டு வண்டிகள் பொங்கலுக்கான பண்டங்களை சேகரித்துக்கொண்டு, பொங்கல் தினமான பங்குனி உத்தர நாள் காலை ஆலயத்தை வந்தடையும். அவ்வாறே இன்று பண்டங்களை சேகரித்த மாட்டு வண்டிகள் புத்தூரிலிருந்து ஏ9 பிரதான வீதி வழியாக பரந்தன் வந்தடைந்து, அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதி ஊடாக புளியம்பொக்கனை ஆலயத்தைச் சென்றடைந்துள்ளது. இன்று ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்