2017 இல் மேஷ ராசியினருக்கான முழுமையான சிறப்பு பலன்கள்…

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது.

அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.

ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

மேஷம் ராசியினருக்கு ஆங்கில புத்தாண்டு எப்படி?
வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே!

2017 புத்தாண்டு பொதுவாக உங்களுக்கு நல்லவிதமான பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறது. ஆண்டின் பிற்பகுதியில் பண வரவு சரளமாக இருக்கும். கடன்கள் எல்லாம் தீர்வாகும் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். இந்த புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தொழில் உத்தியோகம்

சிறப்படையும் இது வரை தடைபட்டிருந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விருவிருப்படையும். பரம்பரை தொழில் நல்லபடியாக செழித்து வளரும். தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழில் லாபம் அதிகரிக்கும். சனி பகவான் ஜனவரி மாதம் 26ம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷ ராசிக்கு 9ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால் நற்பலன்கள் அதிகரிக்கும்.

இதே போல குருபகவான் செப்டம்பர் 12ம் தேதியன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். இது உங்கள் ராசிக்கு ஏழாம் இடம் ஆகும். துலாம் ராசியில் அமரும் குரு பகவான் உங்கள் ராசியை சம சப்தம பார்வையிடுவது சிறப்பு. ஆண்டு துவக்கத்தில் ராகு 5ம் இடத்தில் இருக்கிறார். கேது 11ம் இடத்தில் இருக்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் 18ம் தேதியில் இருந்து ராகு கடகத்திற்கும், கேது மகரத்திற்கும் இடப் பெயர்ச்சியடைகின்றனர். இது மேஷ ராசிக்கு ராகு 6ம் இடத்திற்கும் கேது 11ம் இடத்திற்கும் பெயர்ச்சியடைகின்றனர்.

இனி 12 மாதங்களுக்கும் என்னென்ன பலன் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.

ஜனவரி – தொழிலில் இடமாற்றம்

மாதக் கடைசியில் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகும். 14ந் தேதிக்குப் பிறகு புதிய இடத்தில் பணியில் அமரும் நிலை உண்டாகும். பணியில் கொஞ்சம் மன ஈடுபாடு குறைவாக இருக்கும். வெளியூர் பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மாதக் கடைசியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.

பிப்ரவரி – சுப செய்தி வரும்
மாத ஆரம்பத்திலிருந்தே உத்தியோகம் சிறப்பாக இருக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு 03ம் தேதி அலுவலகத்திலிருந்து உத்தரவு கிடைக்கும். 13ம் தேதிக்குப் பிறகு சம்பள உயர்வு கிடைக்கலாம். 27ம் தேதிக்குப் பிறகு கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபமங்கள தகவல் வந்துசேரும்.

மார்ச் – புத்திசாலித்தன காரியம்
இந்த மாதம் 14ம் தேதிக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாத ஆரம்பத்தில் உறவினர் ஒருவர் காலமாகலாம். 27ம் தேதிக்குப் பிறகு புத்திசாலித்தனமாக சமயோசிதமாக காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

ஏப்ரல் – வருமானம் அதிகரிக்கும்
மாத ஆரம்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். 14ம் தேதிக்குப் பிறகு அப்பாவின் வகையில் ஆதாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இம்மாதம் 13ம் தேதிக்குப் பிறகு வருமானம் அதிகரிக்கும்.

மே – சகோதரர்களால் நன்மை
வீடு நிலம் வகையில் செலவுகள் அதிகரிக்கும். 15ம் தேதிக்குப் பிறகு புதிதாக வாகனம் வாங்குவீர்கள். 27ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். நிலபுலன்களில் முதலீடு செய்வீர்கள். சகோதரர்களால் பணவரவு உண்டாகும்.

ஜூன் – பணவரவு
மாத ஆரம்பத்தில் பூர்வீக சொத்திலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் அப்பா சம்பாதித்த பூர்வீக வீட்டை விற்பனை செய்யும் நிலை உண்டாகலாம். தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும்.

ஜூலை – கடன்கள் தீரும்
மாதத்தின் ஆரம்பத்தில் அலைச்சல் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு புதிதாக நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு நிலம் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்கவும். 21ம் தேதிக்குப் பிறகு வாங்கிய கடன்கள் தீர்வாகும். 26ம் தேதிக்குப் பிறகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஆகஸ்ட் – பூர்வீ க சொத்து
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் மாதமிது. பூர்வீக சொத்து கிடைக்கப் பெறுவீர்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள். புதிதாக வாகனம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. பழைய வீட்டை வாங்கி புதுப்பீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

செப்டம்பர் – பொருளாதாரத்தில் கவனம்
பரம்பரை நிலம் வீடு வகையில் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகலாம். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினரிடம் நட்புறவு சிறப்படையும். கைக்கு வந்த காசு கையில் நிற்காது. பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது.

அக்டோபர் – தடை நீங்கும்
அப்பா வகையில் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாவார். சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு பாராட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும் பண வரவு அதிகரிக்கும். மனைவியிடம் சச்சரவு செய்வதை தவிர்ப்பது நல்லது.
நவம்பர் – பெண்களால் அதிர்ஷ்டம்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகலாம். எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். மனதில் எரிச்சல் அதிகரிக்கும். பெண்களால் அதிஷ்டம் அதிகரிக்கும்.

டிசம்பர் – ஆன்மீக சுற்றுலா
குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். மனைவிக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி கொடுப்பீர்கள்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்