கண்டியில் கரணம் போட்ட இன மோதல்கள் மீண்டும் ஒரு சகவாழ்வு மாற்றத்திற்கு தூபமிடுமா?

கண்டிய வரலாற்றை நாம் உற்று நோக்குவோமானால் கண்டி இராஜதானியாக இருந்த இராட்சியத்தில் பல காலச்சுவட்டு பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளினால் தலதா மாளிகையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் வணக்கஸ்தலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் பலத்தையும் தாண்டி பல வெறுப்புணர்வுகளை தோற்றுவித்திருந்தது.ஆங்கிலேயர்களினால் ஆரம்பத்தில் ஆட்சி இடம்பெற்றிருந்த பொழுதும் மத ரீதியான அடக்குமுறைகள் இடம் பெற்றிருந்தது வரலாற்று உண்மை சம்பவ பதிவுகளாக இருக்கின்றன. மத ரீதியான புரள்வுகளை ஏற்படுத்தாமல் மானிட மனிதநேயப் பண்புகளை வளர்க்க வேண்டும் .மதம் அன்பை போதிக்கும் வேளை ஏன் நாம் மதம் என்னும் போர்வையில் மூர்க்கம் அடைகின்றோம் .ஒருவர் பேசும் மொழி புரிவு இன்றேல் சற்று இடைஞ்சல் ஏற்படினும், எந்த ஒரு அரசும் மொழிப்பிரகடனத்தை ஏற்படுத்தினும் மத ரீதியான பிரகடனம் வெளிப்படுத்தப்படுவதில்லை

இவை இன்று அரசியல் மயப்படுத்தப்படுவதனாலும் மதம் மார்க்க விமோசனம் அடைவது குறைவாக காணப்படுகின்றது. எனவே இலங்கையில் ஒவ்வொரு மதங்களிர்க்கும் அமைச்சுக்கள் காணப்படுகின்றது .

இவற்றோடு மேலதிகமாக நல்லாட்சி அரசு என இன்று கேள்விக்குறியாகியுள்ள அரசில் மொழிகள் மற்றும் சகவாழ்வு இவற்றோடு மேலதிகமாக கலந்துரையாடல் அமைச்சு காணப்படுகின்றது. இவ்வாறான அசம்பாவிதங்களின் பொழுது அல்லது அதற்கு முன்னரான அதன் பின்பான நடவடிக்கை என்ன? அவர்களின் வகிபாகம் என்ன? வெறுமனே போதிப்பதனால் மற்றும் பயன் என்ன மக்களிடத்தே செயற்பாடுகள் அடைவு மட்டத்தை எட்டியிருக்கின்றதா என்பது கேள்விக்குறியே!

எவ்வாறு இந்த அமைச்சுக்கள் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பாடுகளை முன்ன்னேடுக்கப்போகின்றது .இல்லை, இவற்றுக்கும் பன்னாட்டு இடங்களில் மேலதிகமான ஆலோசனைகளை பெறப்போகின்றார்களா? மேலும், இவற்றில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகளும் அளப்பெரியது ஆனாலும் அவை சமூகத்தில் வெற்றியளித்திருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

மானிடத்தை நாம் மனங்களில் வளர்த்தால் நாம் ஒவ்வொருவரும் சகவாழ்வு அமைச்சர் தான்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்