இப்படியும் ஒரு வினோத கலாச்சாரம்!! ஆபிரிக்கப் பழங்குடியினரின் விசித்திர திருமணம்..!

பழங்குடியினர் என்றாலே கலாச்சாரம். பல இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இந்த உலகில், ஏராளமான விநோதமான கலாச்சாரங்கள் இருந்து வருகின்றது. காலப்போக்கில் நாகரிகம் வளர்ந்தாலும் பழமையிலேயே வாழும் பழங்குடி மக்கள், தங்களது கலாச்சாரத்தை இன்னும் விட்டுக் கொடுக்காமலேயே வாழ்ந்து வருகின்றனர்.அந்த வகையில் தன்சானியா பழங்குடியினரின் பழக்கவழக்கம் மிகவும் வினோதமாக உள்ளது. அப்படி என்ன அதில் புதிது இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.!

வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் தான் இவர்கள் மற்றவர்களிடமிருந்து, தனித்து தெரிகின்றனர்.குரிய பழங்குடியின மக்களின் உள்ளூர் பாரம்பரியத்தின் படி, பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முன், குழந்தைக்காக ஒரு ஆணை திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்வார்களாம்.!

அதுவும் அந்த பெண்களே தனக்கான ஆணை தேர்வு செய்து, குழந்தை பெற்றுக் கொண்ட பின் பெண்கள் மற்ற பெண்ணை திருமணம் செய்து, அந்த இரு பெண்களும் சேர்ந்து அந்த குழந்தையை வளர்ப்பார்களாம்.ஆண்களும் தந்தைக்கான உரிமையை எடுத்துக் கொள்ளாமல் பெண்களிடமே விட்டு சென்று விடுவார்களாம்.

தயவு செய்து இந்த தகவல்களையும் தவறாமல் படியுங்கள்……………..

அஷ்டமி நவமியில் நல்ல காரியங்களை ஏன் செய்யக் கூடாது தெரியுமா?

சுமங்கலிப் பெண்கள் ஏன் மொட்டை அடிக்கக்கூடாது தெரியுமா? சாஸ்திங்கள் கூறும் உண்மை என்ன?

திருமண தம்பதிகளாக கருதப்படும், அந்த இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட மாட்டார்களாம்.

இப்படி ஒரு பழக்கம் ஏன்?
குழந்தை இல்லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பெண்கள் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் இந்த வினோதமான பழக்கத்தை, தன்சானியா பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்