பெண்கள் மட்டும் பணிபுரியும் புகையிரத நிலையம்!! ஆந்திராவில் அசத்தும் பெண்கள்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராங்கிபுரம் கிராமத்தில்தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. குண்டூர் – நர்சரோபேட் வரையில் உள்ள இடங்களை உள்ளடக்கி பிராங்கிபுரம் புகையிரத நிலையத்துல் ஸ்டேஷன் மாஸ்டர், பயணசீட்டை சரிப்பார்பவர் என அனைவரும் பெண்கள்தான்.ஜெப்பூரின் காந்தி நகர் புகையிரத  நிலையம், இந்தியாவின் மாடுங்கா புகையிரத  நிலைத்திற்கு பிறகு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மூன்றாவது ரயில் நிலையமாக பிரங்கிபுரம் உள்ளது.இதுகுறித்து குண்டூரின் புகையிரத  மேலாளர் பூமா “இந்திய ரயில் நிலையங்கள் பெண்களுக்கான அதிகாரமளிக்கும் இடமாக உள்ளன. பல்வேறு துறைகளில் செயல்படும் பெண்களின் திறனை நாங்கள் காட்டுகிறோம்” என கூறியுள்ளார்.

இந்த தகவலையும் தவறாமல் படியுங்கள்……………

இயந்திரமயமான வாழ்க்கையில் சிக்கி ஒராண்டுக்கு பின் தாயைப் பார்க்க வீட்டுக்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கை உட்பட பல நாடுகளில் இயங்கிய பேஸ்புக் Explorer Feed நிறுத்தம்!

இந்த புகையிரத  நிலையத்தின் சில பிளாட்பார்ம்களில் பெண்களுக்கான சானிடரி நாப்கின் பேட் பெறுவதற்கான வசதிகளை செய்து இந்தியாவின் முன்மாதிரி புகையிரத  நிலையங்களில் ஒன்றாக பிரங்கிபுரம் புகையிரத  நிலையம் விளங்குகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்