தாமதிக்காமல் பேஸ்புக்கில் இருந்து உடனடியாக இதனை அழித்து விடுங்கள்!

இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில், நாம் அனைவரும் இணையம் வழி வர்த்தகத்தையே பெரும்பாலும் விரும்புகிறோம்.

ஆனால், இதனை சாதூர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் இணையதள திருடர்கள், ஹேக்கிங் மூலம் தரவுகளை பெற்று எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இணையம் மூலம் பணம் திருடு போகாமல் தடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சைபர் கிரைம் பொலிஸார் வழங்கியுள்ளனர்.

அதன்படி, பேஸ்புக் பக்கத்தில், உங்களது பெயர் குறித்த முழுத் தகவலை பதிவிட வேண்டாம். உங்களது செல்போன் எண், பிறந்த திகதி ஆகியவற்றையும் அதில் பதிவிட வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பேஸ்புக் மூலம் பெயர், செல்போன் எண், பிறந்த திகதி உள்ளிட்ட தரவுகளை பெறும் இணைய திருடர்கள், வருமானவரித்துறை இணையதளத்தில் அதனை பதிவிட்டு உங்களது பான் அட்டை எண்ணையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதன்மூலம், பான் அட்டை தொலைந்து விட்டது என்று பதிவு செய்து புதிய பான் அட்டையையும் பெற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து செல்போன் தொலைந்து விட்டது என்று கூறி முதல் தகவல் அறிக்கை பதிவும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதனைக் கொண்டும், பான் அட்டை ஆதாரத்தையும் கொண்டும் உங்களது செல்போன் எண்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

அதனையடுத்து, உங்களது இணைய வங்கி கணக்கின் பாஸ்வேர்டு மறந்து விட்டது என்று கூறி, அதனையும் பெற்றுக் கொண்டு எளிதாக மோசடியில் ஈடுபடுகிறார்களாம்.

அதேபோல், இந்த இணையம் வழி திருடர்கள், தனிப் புரோகிராம்களை தயாரித்து, வங்கி இணையதளங்களை ஹேக்கிங் மூலம் முடக்கி விடுகின்றனர்.

அதில் இருந்து வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று கொண்டு, சர்வ சாதாரணமாக பணத்தை திருடி கொள்கின்றனராம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து கொடுக்கப்படும் இணைய கணக்குக்கான பாஸ்வேர்டுகளை மாற்றாததும் இணையம் வழி திருட்டுக்கு வழிவகுத்து விடுகிறது.

இதில், மற்றோரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த இணையம் வழியான திருட்டில் ஈடுபடும் நபர்களின் 75 சதவீதத்தினர் நன்கு படித்த இளைஞர்கள் தானாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்