செல்பி கமெராவில் 3டி: ஐபோன் 8-ல் புதிய அறிமுகம்

ஐபோனை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகேற்ப வசதிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது வெளிவந்த ஐபோன் 7S மொடல்களிலிருந்து கவனம் குறையும் முன்னரே ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த மொடலான ஐபோன் 8-யை அறிமுகப்படுத்த தயாராகி விட்டது.

ஐபோன் 7S-ஐ விட ஐபோன் -8 பிரமிப்பூட்டும் அதிக வசதிகளுடன் தயாரிக்கப்படவுள்ளது.

இதுவரை எந்த போனிலும் இல்லாத வகையில் செல்பி கமெராவில் இன்பிராரெட் மாட்யூல் மற்றும் 3D வடிவில் புகைப்படம் எடுக்கும் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இதனை சோனி நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என்ற டிஸ்பிளே அளவுகளில் 3ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 256ஜிபி என இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்கள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக அளவு வசதியுடையதாக இருப்பதால் விலையும் அதிகமாக இருக்கும். மேலும் விரைவில் சோதனைகள் முடிந்து இந்த ஆண்டில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்