வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த இலங்கையர்!!

இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார்.19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கும் சவின் பெரேரா இலங்கையை சேர்ந்தவர் ஆவார்.கொழும்பில் பிறந்த சவின் பெரேரா 13 வயதில் பிரித்தானியாவில் குடியேறினார். அங்கு அவர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார்.கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் சவின் பெரேரா பிரித்தானியாவுக்கு குடியெர்ந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியில் விளையாடும் போது, தனக்கு சிங்கள மொழி அறிவு உள்ளமையினால் இலங்கை வீரர்கள் கூறுவதனை அறிந்து கொண்டு விளையாட முடியும் என சவின் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் பிறந்த ஒருவர் இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்