2019 முதல் அனைத்து ஐபோன்களும் இப்படித்தான் இருக்குமாம்!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோனை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

எனினும் இதனை வாங்குவதற்கு அனைவருடமும் வசதி இருப்பதில்லை. அந்த அளவிற்கு விலை அதிகமாகும்.

ஒவ்வொரு வருடமும் ஐபோன்களில் புதிய மொடல்கள் வெளியாகும்போது அவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் சிலவும் உட்புகுத்தப்பட்டிருக்கும்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு முதல் வெளியாகும் அனைத்து ஐபோன்களிலும் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரை காணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டில் மூன்று வகையான கைப்பேசிகளை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளதுடன், அவற்றில் இரண்டில் LCD தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையும், மற்றைதில் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையும் தரப்படவுள்ளது.

அதன் பின்னர் 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் ஐபோன்களில் அரைப்பகுதியில் இத் தொழில்நுட்பம் உள்ளடக்கப்படவுள்ளதுடன், 2019ம் ஆண்டிலிருந்து அனைத்து கைப்பேசிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்