எச்சிலை வைத்து மரணத்தை கண்டுபிடிப்பது எப்படி என தெரியுமா..?

உயிரினங்களுக்கு பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படுவது என்பது இயல்பான ஒரு விஷயமாகும். ஒருவரின் பிறப்பை நாம் கணிப்பது போல அவர்களுக்கு எப்போது இறப்பு ஏற்படும் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. நமது உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்கள், கண், வாய், போன்ற சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற ஒருசில அறிகுறிகளை வைத்து, நமது உடலில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை மட்டுமே கண்டறிய முடியும்.

 

ஆனால் ஒருவரின் எச்சிலை வைத்து, அவருடைய மரணத்தை முன்னதாக அறிந்துக் கொள்ள முடியும் என்று லண்டனில் பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். எச்சிலை வைத்து மரணத்தை கண்டுபிடிப்பது எப்படி? லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பிலிப்ஸ் என்ற ஆய்வாளர் நமது உடம்பில் உள்ள இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஒருவரின் எச்சிலில் இருக்கும் ஆன்டி- பாடி எண்ணிக்கையானது, மரண விகித்தத்தோடு ஒத்துப் போவது தெரியவந்தது.

நமது உடம்பின் வெள்ளை ரத்த அணுக்களில் சுரக்கப்படும் புரதங்கள், இம்யூனோக்ளோபுலின் அல்லது ஆன்டி-பாடீஸ் போன்ற தொற்று நோய்களை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது. நம்முடைய வயது, பாரம்பரியம், உடல்நலக் குறைபாடுகள், மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மதுப் பழக்கம், புகை போன்ற காரணங்களினால் தான் நமது உடம்பில் உள்ள இம்யூனோக்ளோபுலின் மற்றும் ஆன்டி-பாடீஸ் ஆகியவற்றின் சதவீதம் குறைகிறது. நுரையீரல் தவிர்த்து மற்ற வகை புற்றுநோயினால் ஏற்படும் மரணங்களை அவர்களின் எச்சிலை வைத்து அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்