இந்த கிழமையில் இதை செய்யுங்கள்..அப்புறம் பாருங்க பெயர், புகழ், செல்வம் எல்லாம் உங்களைத் தான் தேடி வரும்..!

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும்.

அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்!

எந்தக் கிழமை, என்ன செய்யலாம்? இதோ…

ஞாயிற்றுக்கிழமை: சுபகாரியத் தொடக்கம், ஹோமங்கள், யாத்திரை புறப்படுதல், பதவி ஏற்றல், சிகிச்சை மேற்கொள்ளல், விதை விதைத்தல் கிரகப்ரவேசம், வாகனங்கள் வாங்குதல், சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம்.

திங்கட்கிழமை: வர்த்தக ஆரம்பம், திருமணம், புராணங்கள் படித்தல், தானிய சேமிப்பு, யாகங்கள், கிணறு வெட்டுதல், மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல், கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல், சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம்.

செவ்வாய்கிழமை: போருக்கான ஏற்பாடுகள் செய்தல், நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல், வாகனங்களுக்கு பூஜையிடல், அஸ்திரவித்தைகள் பழகுதல், முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் ஆகியவை செய்யலாம்.

புதன் கிழமை: திருமாங்கல்யம் செய்தல், ஹோமசாந்தி செய்தல் மருந்து உண்ண ஆரம்பித்தல், நீதி, தர்மம் பரிபாலித்தல், கல்வி, கலை கற்கத் தொடங்குதல், புதிய வாகனத்தில் பயணம் செய்தல், பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம்.

வியாழக்கிழமை: கடவுள் படங்கள், சிலைகள் வாங்குதல், பிதிஷ்டை செய்தல், சுபகாரியங்கள் செய்தல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், தியானம் பழகத் தொடங்கல், போர்வெல்-கிணறு போடுதல், வேதம் கற்றிடத் தொடங்குதல், தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல், அறிஞர்கள் உரை கேட்டல், மகான்களை தரிசித்தல் ஆகியன செய்யலாம்.

வெள்ளிக்கிழமை: விவாகம், சுமங்கலி பூஜைகள், கிரகப்பிரவேசம், குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்துதல், மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.

சனிக்கிழமை: பருத்தி விதைத்தல், இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல், தீட்சை வாங்குதல், வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல், இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல், சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

ஞாயிற்று கிழமையில் சூரிய பகவானை வணங்கிட வேண்டும். இதனால் என்ன பலன் என்றால், நம்மை அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

திங்கள் கிழமை சிவபெருமானையும், ஸ்ரீமகாலஷ்மியையும் வணங்க வேண்டும். நல்ல அந்தஸ்து உண்டாகும்.

செவ்வாய் கிழமை முருகப்பெருமானையும்,சக்திதேவியையும் வணங்கினால், நோய்கள் குறையும். விரோதங்கள் ஒழியும். கடன்கள் குறையும். இன்னல்கள் மறையும்.

புதன் கிழமை ஸ்ரீமகா விஷ்ணுவை வணங்கினால், நல்ல நண்பர்கள், நல்ல புத்திரர்கள் அமைவார்கள். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.

வியாழ கிழமையில் மகான்களையும், தேவர்களையும் வணங்கினால் இன்னல்கள் மறையும். மனநிம்மதி உண்டாகும். திருமண தடை விலகும். கல்வி மேன்மை பெறும்.

வெள்ளி கிழமையில் உங்களுக்கு தெரிந்த இறைவனின் மந்திரங்களை உச்சரித்து வணங்கினாலும், வெகு சுலபத்தில் நாம் எடுக்கும் வேலையில் வெற்றி கிட்டும்.

சனிக்கிழமையில் சிவனை வணங்கினால் விரோதிகள் ஒழிவார்கள், உடலில் உள்ள ரோகங்கள் நீங்கும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்?

அன்னதானம், பால், தயிர் இவற்றை தானம் செய்தால் மனம் நிம்மதியடையும், வாக்கு பலிதம் உண்டாகும், உடல் ஆரோக்கியம் பெரும். தீவினை கர்மாக்கள் நீங்கும்.

வஸ்திர தானம் செய்தால், ஆயுள் விருத்தி உண்டாகும். மானம் காக்கப்படும். உப்பு.

வெல்லம் இவைகளை தானம் செய்தால், சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது.

பூசணிக்காயை தானம் செய்தால், சகல வியாதிகளும் விலகும். பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும், இஷ்ட சித்தி கைக்கூடும்.

ஏழை கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால், இதுவரையில் எடுத்த அனைத்து ஜென்மங்களின் பாவங்கள் நிவர்த்தியாகும்.

இசை வாத்திய கருவிகளை தானம் செய்தால், இந்திரனுக்கு நிகரான சுகபோகமான வாழ்க்கை அமையும் பொன் தானம், மோச்சத்தை கொடுக்கும்.

தைலம், பருத்தி, துணி,பால் போன்றவை தானம் செய்தால், குஷ்ட ரோகம் உட்பட உடலில் இருக்கும் அனைத்து ரோகங்களும் நீங்கும்.

தீப தானம் செய்தால் கண் பார்வை பலப்படும். நல்ல எதிர்காலம் தேடி வரும். பிரச்னைகளுக்கு விடிவு காலம் பிறக்கும். தயிர்சாதம் தானம் செய்தால் நல்ல பிள்ளைகளை பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலமும் மகிழ்சியாக அமையும்.

தேன், பொன், நெய்தானம் செய்தால் சகல போகங்களையும் அனுபவிப்பார்கள்.

இரும்பு, எண்ணை, உளுந்து, பழங்கள், நீர் இவைகளை தானம் செய்தால், கஷ்டங்கள் விலகும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்