கணக்காளர் சேவை தரம் iii போட்டிப்பரீட்சைக்கான முக்கிய அறிவித்தல்!!

இலங்கை கணக்காளர் சேவை தரம் iii இற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை இம்மாதம் 12, 28 மற்றும் பெப்ரவரி மூன்றாம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாம் 22,23 மற்றும் 29ம் திகதிகளில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சை செல்லுபடியாகாது என்று அறிவித்துள்ள பரீட்சை ஆணையாளர் அதற்குப் பதிலாக புதிய பரீட்சை தினங்களை அறிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 57 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதுடன் இப்பரீட்சைக்காக 8837 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்போட்டிப்பரீடசை நடத்தப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்