கூட்டு எதிரணியின் மற்றுமொரு முக்கிய உறுப்பினரும் ஜனாதிபதியுடன் இணைவு!

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த முக்கிய உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவருமான சோமவீர சந்திரசிறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்ற சந்திரசிறி, ஜனாதிபதியை சந்தித்து அவரது வேலைத்திட்டங்களுக்கு தனது உச்சளவு ஆதரவை வழங்குவதாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும் கூறியுள்ளார்.ஏற்கனவே தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீயானி விஜேவர்தன, ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டதுடன் பிரதியமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்