இம்முறை தேர்தலில் வாக்களிப்பின் போது மோசடிகளை தடுக்க புதிய வழிமுறை!!

வாக்களிப்பின் போது மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு புதிய வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வாக்குச் சீட்டுக்களின் பின்னாலும் கிரேக்க எழுத்தோ அல்லது இலக்கம் ஒன்றோ குறித்து முத்திரையிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வாக்காளர்கள், வாக்குச் சீட்டில் தமது வாக்கினை பதிவு செய்து அதன் பின்னர் வாக்குச் சீட்டை மடித்து, வாக்குப் பெட்டிக்குள் வாக்குச்சீட்டை இடுவதற்கு முன்னதாக வாக்குச் சாவடியின் பொறுப்பதிகாரியிடம் இந்த கிரேக்க எழுத்து அல்லது இலக்கத்தை காண்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.மோசடியான முறையில் வாக்குச் சீட்டுக்களைத் தயாரித்து வாக்குப் பெட்டிக்குள் இடுவதனை தடுக்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்லிடப்பேசிகள் எடுத்துச் செல்லுதல், புகைப்படங்களை எடுப்பது போன்றன முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்