வவுனியாவில் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட அதி சொகுசு உணவகம்

வவுனியாவில் அனைத்து வசதிகளுடனும் கூடிய உணவகம் ஒன்று இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ளது.வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62ஆவது படை பிரிவுகளின் 621ஆவது படைப்பிரிவிற்கு விஜயம் மேற்கொண்ட வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா குறித்த உணவகத்தை திறந்து வைத்துள்ளார்.இந்த கட்டடம் இயற்கை சூழலுடன் விசாலமான உணவுசாலை, அதிகாரிகள் தங்கும் அறை, தொலைக்காட்சி அறை மற்றும் பல இட வசதிகளுடன் மாடிக் கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த நிகழ்வில் 62ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சஞ்சய வனிகசூரிய மற்றும் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்