உள்ளூராட்சித் தேர்தல்:அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடத் தடை!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது, உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தேர்தல் முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுமென சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,இது இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தினால் அனுமதிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை மாத்திரம் வெளியிட ஊடகங்கள் அனுமதிக்கப்படும்.ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் பதிவான அஞ்சல் மூல வாக்குகளின் முடிவுகள் தனியாக வெளியிடப்படமாட்டாது.’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்