பொதுமக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!! கேப்பாபிலவில் 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், இலங்கை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இலங்கைப் படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபாவை இலங்கை இராணுவத்துக்கு வழங்கியிருந்தது.இதையடுத்து, படைத்தளங்கள் இடம்மாற்றப்பட்டு, இன்று பொதுமக்களின் 133 ஏக்கர் காணிகள் அதிகாரபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன.அதேவேளை, கேப்பாப்புலவில் இலங்கைப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்கக் கோரி, அங்குள்ள மக்கள் 300 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமது நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்