ரோபோக்களை ஈடுபடுத்தி வாடிக்கையாளர் சேவையில் புதிய புரட்சியில் சென்னை உணவகம்!!

இந்தியாவின் சென்னையிலுள்ள உணவகமொன்றில் ரொபோக்களை சேவையில் ஈடுபடுத்தி வாடிக்கையாளர் சேவையில் புதிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.குறித்த ‘ரொபோ’ உணவகத்தில், உணவு வகைகளை பறிமாறவும், துப்புரவு நடவடிக்கையிலும் ரொபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே ‘மொமோ’ எனப் பெயரிடப்பட்டிருந்த குறித்த உணவகமானது ரொபோக்களை சேவையில் ஈடுபடுத்தியதை அடுத்து, அதன் பெயரை ‘ரொபோ’ உணவகம் என பெயர்மாற்றியுள்ளது.குறித்த உணவகத்தில் ஒவ்வொரு மேசையிலும் வைக்கப்பட்டுள்ள தொலைப்பேசியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான உணவை ஓடர் செய்துக்கொள்ளலாம்.இவ்வாறான சேவைகளில் ரொபோக்களின் பயன்பாடு பல நாடுகளில் பொதுவான நடவடிக்கையாக மாறி வருகின்ற நிலையில், இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய செயற்பாடுகள் எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் அபிவிருத்தி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்