இலங்கையில் அத்தியாவசிய சேவையாக ரயில் சேவை பிரகடனம்!! வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது!

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார் .
தற்போதைய நிலைமையைக்கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.12 ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபுறக்கணிப்பை முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.குறிப்பாக தமக்கான சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் நிரந்தர தீர்வு வழங்கப்படாமையின் காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.இந்த நிலையில் நேற்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும், ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இந்த வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்எதிர்வரும் காலங்களில் புகையிரத சேவை பாதிக்கப்படாமல் இருப்பதனை தடுக்கும் வகையில் அதனை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அஞ்சல் சேவையும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்