கூட்டமைப்பின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வித்தியாதரன்? தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியில் பிரபல எம்.பி ?

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலில் யாழ்.மாநகரசபைக்கு முதல்வர் வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் தமிழரசுக்கட்சிக்குள் குழப்பம் நிலவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வித்தியாதரனை நியமிக்கவேண்டாம் என சரவணபவன் கடும் அழுத்தங்களை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது.இந்தியாவின் சிபார்சுக்கமைய, வித்தியாதரனை நியமிப்பதற்கு தமிழரசுக்கட்சி தீர்மானித்திருப்பதாகவும், ஆனோல்ட்டுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகத் தெரிவித்து வித்தியாதரனை முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரியவருகிறது.இதனிடையே மணிக்கு ஒரு தடவை மாவை சேனாதிராஜாவை தொலைபேசி ஊடாக அழைக்கும் சரவணபவன், வித்தியாதரனை முன்நிறுத்தவேண்டாம் என்றும் நிறுத்தப்பட்டால் உதயன் எதிராக எழுதும் என்று மிரட்டல் விட்டுவருவதாகவும் சொல்லப்படுகின்றது.இதேவேளை வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரத்தினையும், சொலமன் சூ சிறிலையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் வித்தியாதரன் ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும், தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்