தங்கப் புதையல் தோண்டிய எட்டுப் பேருக்கு நேரப் போகும் கதி என்ன தெரியுமா?

அனுராதபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த எட்டுப் பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அனுராதபுரம் தலாவ குருந்துவெவ பிரதேசத்தில் புதையல் தோண்டிய எட்டுப் பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.தனியாருக்கு சொந்தமான காணியில் புதையல் தோண்டும் நோக்கில் பூஜை நடத்துவதற்கு பாரிய குழி ஒன்றை தோண்டிய போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் குறித்த காணிக்கு உரிமையாளரான பெண் உட்பட மேலும் 3 பெண்கள் உள்ளடங்குவதாகவும், ஏனையவர்கள் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த இடத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களுடன் அகழ்வு உபகரண பொருட்கள், பூஜைக்கான பொருட்கள் உட்பட வைரவர் புகைப்படங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.பொலிஸார் குறித்த இடத்தை சுற்றிவளைக்கும் போதும், புதையல் தோண்டியவரின் வீட்டில் இருந்து 12 மீற்றர் தொலைவில் 10 அடி ஆழமான பாரிய கிணறு ஒன்றும் தோண்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த காணியின் உரிமையாளரான பெண்ணின் தந்தையினால் அந்தப் பகுதியில் புதையல் இருப்பதாகவும், அதனை பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாகவும், குறிப்பிட்டுள்ளார்.’ஏன் மகள் கவலையாக இருக்கின்றீர்கள். நீங்கள் வாழ்வதற்கு சொத்துக்கள் உள்ளது. நீங்கள் விரும்பிய காலம் வரை மகிழ்ச்சியாக வாழ முடியும். அதற்கு தேவையான இரத்தினகல், புதையல் வீட்டின் பின் பக்கம் உள்ளது.அதனை தோண்டிப் பெற்றுக் கொள்ளுமாறு அவரது தந்தை கனவில் வந்து கூறியதாக, குறித்த பெண் விசாரணையின் போது பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.சந்தேகநபர்கள் இன்று தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்