உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சின்டோவர் மகத்தான சாதனை..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டம்பா பகுதியில் அமைந்துள்ள சின்டோவர் ஆய்வகமானது, மருத்துவ மாணவர்களின் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பொதுவாக, மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் பிணத்தை ஆய்வு செய்வது உண்டு.மனிதனை போலவே ரத்தம் சிந்தும் மூச்சு விடும் தன்மையுள்ள இந்த செயற்கை உறுப்புகளைக் கொண்டமைந்த உடலை அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ளது.இறப்பர், சிலிக்கன் மற்றும் பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டு வந்த இந்த செயற்கை உறுப்புகள் தற்போது உயிருள்ள திசுக்களுடன் கூடியதாக உருவாக்கியுள்ளது சின்டோவர் ஆய்வகம்.முன்பு தயாரிக்கப்பட்ட உடல் தசைகள் நெகிழும் தன்மை மற்றும் ஈரப்பசை அற்றதாக இருந்த நிலையில் தற்போது நெகிழும் தன்மையுடன் ஈரப்பசையுடன் கூடிய செயற்கை உறுப்புகளை சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ளது.இது மருத்துவ மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.உண்மையான மனித உடல் போல காட்சியளிக்கும் இந்த செயற்கை உடலானது 65 லட்சம் ரூபாய் இந்தியப் பெறுமதிக்கு விற்பனை செய்யப்படுவதோடு இயங்காத தன்மையுள்ள உடலானது 44 லட்சம் ரூபாய் இந்தியப் பெறுமதிக்கும் கிடைக்கின்றது.உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் அனைத்தும் உண்மையானது போன்றே இருப்பதோடு, மென்பொருள்க் கட்டுபாட்டில் இயங்கும் இந்த செயற்கை உடலானது, இதய துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்