சம்பந்தன் அமர்ந்திருக்கும் கூட்டமைப்பின் தலைமைப் பதவி என்னுடையதே! ஆதங்கப்படும் ஆனந்த சங்கரி!!

நாட்டுப்பற்றிருந்தால் எங்களுடைய புதிய கூட்டணியில் வந்து இணையுங்கள், கடந்த கால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று(08) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  குறித்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;பொய் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்துவதனை விடுத்து, வந்து எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.கஜேந்திரகுமார் அரசியலில் பால்குடி. நான் நாடாளுமன்ற போகும் போது அவர் பிறக்கவில்லை. ஆகவே அவர் வாய் திறக்கும் போது, யோசித்துவிட்டு திறக்க வேண்டும்.நான் கஜேந்திரகுமாரின் தந்தை பேரன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்தவன்.ஆகவே வரலாறு தெரியாது பேசுவது சிறுபிள்ளைத் தனமானது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி தீர்வை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டவர்.அவருக்கு எதிராக மஹிந்த போட்டியிட்டவர். ஆனால் கஜேந்திரகுமார் தரப்பினர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார்கள். இது சமஸ்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதே.

இதனை அவர் மறந்திருக்க முடியாது. வரலாறு இப்படியிருக்க நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை பேசவில்லை என்று கூறுவது சுத்தப்பொய்.நாங்கள் இன்றும் சமஸ்டியை வலியுறுத்தி வருகின்றோம் அல்லது சமஸ்டியை எட்டும் வரைக்கும் இந்திய முறையிலான தீர்வை வலியுறுத்தியிருகின்றேன் எனத் தெரிவித்த ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாரின் தந்தை மற்றும் அவரின் பேரன் ஆகியோர் உன்னதமான தலைவர்கள். எனவே கஜேந்திரகுமார் இவர்களின் வரலாறுகளை அறிந்து பேசவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அத்துடன் சம்பந்தன் தற்போது இருக்கும் கதிரை என்னுடையது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நான் கூறவில்லை. மற்றைய பதவி என்னுடையது. நான் பல விட்டுக்கொடுப்புக்களை செய்துள்ளேன் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு. வீ ஆனந்த சங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்