வடக்கில் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கணிசமானளவு வெற்றி பெறும்: அங்கஜன் எம்.பி

வடக்கில் மக்கள் இம்முறை சின்னங்களை பார்த்து வாக்களிக்கமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர்கள் அபிவிருத்திக்கு தேவையான நல்ல மனிதர்களை பார்த்தே வாக்களிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய தினம் செலுத்தியுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் இந்த கட்டுப்பணத்தை யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை செலுத்தி, வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தினை பெற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் யாழ். மாவட்டத்தின் சகல பிரதேசசபைகளிலும் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடும். அத்துடன் கணிசமான வெற்றியையும் பெற்றுக் கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்