ஓயாத இருமலை நிரந்தரமாக விரட்ட நினைக்கிறீர்களா? இந்த பாட்டி வைத்தியம் கை கொடுக்கும் !!

நுரையீரலில் கிருமிகளின் தொற்று , மாசுபட்ட காற்று, தூசு ஆகியவை தாக்கும்போது, எதிர்ப்பை காட்டும் விதமாக நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அலர்ஜியை உண்டாக்குவதே இருமல்.

காய்ச்சல், நுரையீரல் அலர்ஜி, நிமோனியா, காச நோய் ஆஸ்துமா ஆகியவற்றால் இருமல் உண்டாகும். குழந்தைகளுக்கு எளிதில் நுரையீரல் தொற்று உண்டாகும்.

இருமலுக்கு காரணம்
மூக்கின் வழியாக கிருமிகளின் தாக்கம் உருவாகும்போது அவை தொண்டைக்கும் பரவும். அங்கே மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருமலை உண்டாக்குகிறது.

இந்த இருமல் இருவகையில் வரும். கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி அதனால் உண்டாகும். அதனை சரியாக கவனிக்காத போது நுரையீரலுக்கும் பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

இன்னொரு வகை அலர்ஜியினால் உண்டாவது. தூசு, ரசாயனம் மற்றும் பல வித காரணங்களால் அலர்ஜி

இயற்கை வைத்தியம்.
இருமல் உடனடியாக நிற்க மாய மந்திரம் என்று எதுவுமில்லை. உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்பட்டு கிருமிகளை அழிக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் உடனடியாக நிற்க வேண்டுமென ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் அதிக காலம் எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். இதனால் பக்க விளைவுகள் உண்டாகலாம்.

இருமலை நிரந்தரமாக குணப்படுத்த நமது இந்திய பாரம்பரியத்தில் பலவகை வைத்தியங்கள் செய்யபப்டுகிறது. அதில் ஒன்றுதான் இந்த சிகிச்சை செய்து பாருங்கள். பலனளிக்கும்.

தேவையானவை :
பால்- 1 டம்ளர்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு – 1

செய்முறை :
பாலை சூடுபடுத்துங்கள். நன்றாக பொங்கும்போது முட்டையின் மஞ்சள் கருவை போடவும். சில நிமிடங்களுக்கு கலக்கவும். பின்னர் அடுப்பை அணைத்திடுங்கள்.

பருகும் முறை :
பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகுங்கள். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை குடிக்க வேண்டும்..

உங்களுக்கு விரைவில் பலனளிக்கும். முயன்று பாருங்கள்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்