இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்!

இந்த 2ம் எண்ணைப் பற்றிய தவறான கருத்து மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள்.
அம்பாளின் அருள் பெற்ற எண் இது. பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும், பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.

இவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பல சமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள். மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை, திட்டமிடுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு. பெரும்பாலோருக்கு முன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும்.

இந்த எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கலை தந்து விடும். முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும். மனதில் நிம்மதி இருக்காது. இவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கும் ஒரு பெண்ணே காரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம் அதிகம் உண்டு. இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல் திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான்.

இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும், ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக் கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள். முக்கிய காரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலத்தைக் கழித்து விட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள். ஒரு மாதத்தின் இறுதியில்தான் அவசர அவசரமாக உட்கார்ந்து அந்தந்த மாதத்தின் வேலையை முடிப்பார்கள். தங்களது வாக்குறுதிகளை இவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம். திருநெல்வேலி சென்றவுடன் அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்ப மாட்டார்கள்.

சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்ல திட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி. தங்களிடம் பல திறமைகள் இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள். இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில் சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.

முக்கிய குறிப்பு

விதி எண் 2 ஆக வரும் அன்பர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள். திருமணம் ஆனவுடன்தான் அம்பாளின் அனுக்கிரகத்திற்கு உட்படுவார்கள். வசதியுடன் மனைவி அல்லது மனைவி வந்தவுடன் வேலை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை இந்த எண்காரர்களுக்கு ஏற்பட்டு விடும். இவர்களும் பிறந்த ஊரை விட்டு வெளியூர் சென்று தொழில், வியாபாரம் அமைந்தால்தான் நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல இலாபங்கள் அடையலாம்.

இவர்கள் நடையில் எப்போதும் வேகம் உண்டு. செலவத்தைச் சேர்ப்பதில் மிகவும் ஆசை உடையவர்கள். உலக சுகங்களை அனுபவிப்பதிலும் மிகவும் நாட்டம் உண்டு. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் குணம் உள்ளவர்கள். மனோவசியம் மற்றும் மந்திர தந்திரங்களாலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று, தேசபக்தி, ஊர்ப்பற்று, தமிழ்ப்பற்று ஆகியவை உண்டு.

பல அன்பர்கள் தங்களின் குறைகளை மறைத்துக்கொண்டு வாழகின்ற இரண்டைக் குணமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெளியே தைரியமுடையவர்களாகத் தோன்றினாலும் உள்ளத்தில் பெண்மையே (பயமே) மேலோங்கி நிற்கும். எனவே, இவர்கள் ஒரு வழிகாட்டியை தேர்ந்தெடுத்து அவரின் ஆலோசனைகளின் பேரில் காரியங்களைச் செய்து வரவேண்டும்.

சந்தர்ப்பங்கள் இவர்களைத் தேடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதைவிட்டு விட்டு இவர்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, முழு மனதுடன் செயலாற்றினால் எளிதில் இவர்களை வெற்றி மகள் தேடி வருவாள்.

உடல் அமைப்பு

இவர்கள் உயரமானவர்களாக இருப்பார்கள். சந்திரனின் வலிமை குறைந்தால், நடுத்தர உயரமாக அல்லது குள்ளமாக இருப்பார்கள். நல்ல சதைப் பற்றுள்ள உடம்பை உடையவர்கள். உடல் பலம் இராது. உருண்டையான முகமும், அகன்ற கண்களும், கனத்த இமைகளும் உண்டு. பற்கள் சீராக இருக்காது. தொந்தி விழுவதை எதிர்பார்க்கலாம்.

ஏனைய இலக்க பலன்கள்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்