வீட்ல வைக்கிற காசு ரெண்டு மடங்கா பெருகணுமா?…அப்டினா இதை பன்னுங்க…

நம்முடைய வீட்டில் எப்போதும் செல்வத்துக்குப் பஞ்சம் இருக்கவே கூடாது என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. எவ்வளவு தான் பணத்தை சிறுசிறுகச் சேர்த்தாலும் அது உப்பு போல கரைந்து கொண்டே போகிறது என்ற கவலை பலருக்கும் உண்டு.

அத்தகைய பிரச்னைகளை விரட்டி, வீட்டில் செல்வம் சேருவதற்கு என்னதான் செய்வது என யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம் அதற்கும் வழிகள் உண்டு.

கீழ்வரும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் செல்வ கடாட்சம் பெருகும்.

வீட்டில் அல்லது, பணிபுரியும் இடத்தில் சந்தனத்தில் செய்யப்பட்ட ஒரு சிறிய பெட்டியை வாங்கி வைக்க வேண்டும். அந்த பெட்டிக்குள் துளசி, வில்வம், வன்னி, ஆல இலை, வெற்றிலை, தாமரை, மல்லிகை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றைச் சேர்த்து பூஜை செய்து வைக்க வேண்டும். பொதுவாக பணத்தை அந்தப் பெட்டிக்குள் வைத்து எடுத்து செலவு செய்யும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமைகளில், வாரம் அல்லது மாதத்துக்கு ஒரு வெள்ளிக்கிழமை உங்கள் கையில் இருக்கும் எல்லா பணத்தையும் ஒரு நாள் முழுக்க அந்த பெட்டிக்குள் வைத்திருந்து, அடுத்த நாள் அதை எடுத்து முக்கிய செலவுக்குப் பயன்படுத்தலாம்.
சந்தனப் பெட்டி வாங்க முடியாதவர்கள் தேக்குப் பெட்டியையோ கரும்புள்ளிகள் ஏதும் இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கி, மேற்கூறிய வழிமுறைகளை செய்து, அதில் பணத்தை வைத்து எடுக்கலாம்.
இதை அடிக்கடி செய்வதால் பணம் பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும். பணம் நம்மிடம் சேரும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்