யாழ். வல்லை கடலில் விழுந்தது ஜீப்…..

யாழ்ப்பாணம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து ஜீப் ரக வாகனம் ஒன்று கடலுக்குள் வீழ்ந்து நீரில் மிதந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் ரக வாகனமே இவ்வாறு வல்லை கடலுக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து இன்று காலை வல்லை வீதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 4 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு காரணம் அதிவேகம் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்