பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர், உதவிக்கணக்காளர், உதவி உள்ளகக் கணக்காய்வாளர் ஆகிய பதவிகளுக்கும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைக்கு  உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் விண்ணப்பிக்க முடியும்.

குறித்த பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிப் பரீட்சை எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு பரீட்சைத் திணைக்களத்தின் இணையத் தளமூடாக வெளியிடப்படும்.

நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பரீட்சார்த்திகளுக்கான நேர்முகத் தேர்வுகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடாத்தி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

ஏற்கனவே உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர், போதிய தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பதுடன், குறிப்பிட்ட பதவிக் காலத்தையும் நிறைவு செய்திருப்பின் அந்தந்த நிறுவனத் தலைவர்களுக்கூடாக விண்ணப்பிக்க முடியும்.

வெளிவாரியாக விண்ணப்பிப்போர், பொது நிர்வாக படப்பின் டிப்ளோமா அல்லது இரண்டாம் வகுப்பு சித்தியுடன் கூடிய பட்டதாரியாக இருத்தல் வேண்டும் என்றும் வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கான உச்ச வயதெல்லை 30 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களையும், விண்ணப்ப படிவத்தையும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்