இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி இப்படிபட்டவரா?

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி டீக்கடை வைத்திருக்கும் நபருக்கு விருந்து அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்னர் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்து வந்தார்.

அந்த காலகட்டத்தில் அவர் ரெயில் நிலையம் அருகில் இருக்கும் ஒரு டீக்கடைக்கு தினமும் சென்று டீ அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பின்னர் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து இன்று புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக அவர் திகழ்கிறார்.
இந்நிலையில், டோனி சில தினங்களுக்கு முன்னர் அந்த டீக்கடைக்கு எதிரில் இருக்கும் பெரிய ஓட்டலில் தங்கியுள்ளார். அப்போது ஜன்னல் வழியே அந்த டீக்கடையை பார்த்த டோனிக்கு பழைய ஞாபகம் வந்துள்ளது.

உடனே அந்த டீக்கடைக்கு சென்று அந்த கடை முதலாளியை டோனி சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.பின்னர் அவரை தன்னுடன் ஓட்டலுக்கு அழைத்து சென்று பெரிய அளவில் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

இது குறித்து டீக்கடை நபர் கூறுகையில், டோனி முன்னர் என் கடைக்கு தினமும் 3 முறை வருகை தந்து டீ அருந்துவார்.இன்று நடந்த இந்த மகிழ்ச்சியான தருணத்துக்கு பின்னர் என் கடையின் பெயரை Dhoni Tea Stall என மாற்றவுள்ளேன் என மகிழ்ச்சியுடன் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்