நீண்ட நாட்களின் பின்னர் வடக்கில் தொடர் மழை…. இன்னும் சில தினங்களுக்கு தொடரும்….

வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகின்றது.

யாழ். மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியில் பல பாகங்களிலும் 3 நாட்களாக கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், மூன்று நாட்கள் பெய்த கடும் மழையில் 100 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. கிளிநொச்சி உள்ள குளங்கள் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரணைமடு குளத்தில் 7 அடியாக இருந்த நீர் சடுதியாக 13 அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.இரண்டாம் இடைநிலைப் பருவப்பெயர்ச்சி காலநிலையாலேயே, தற்போது மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.

இதேவேளை, மழைவீழ்ச்சி தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்