12 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியை சமன் செய்த ஸிம்பாப்வே அணி !!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டுள்ள சிம்பாப்பே அணி, 12 வருடங்களின் பின்னர் முதன்முறையாக தோல்வியை தவிர்த்துக்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது, இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து, சோ டவ்ரிச் மற்றும் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் பெற்ற சதங்களின் உதவியுடன் மேற்கிந்தியதீவுகள் அணி தமது முதல் இனிங்சில் 448 ஓட்டங்களை குவித்தது.

இதனை அடுத்து சிம்பாப்வே அணி இரண்டாவது இனிங்சுக்காக 301 ஓட்டங்களை பெற்று மேற்கிந்தியதீவுகளை விட 179 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றது.

இவ்வாறான நிலையில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது நாள் ஆட்டம் நிறைவடையும் நிலையில் இருந்த போது சிம்பாப்வே அணி 144 ஓவர்களை எதிர்கொண்டு 301 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனால் மேற்கிந்தியதீவுகள் அணிக்கு தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு இல்லாமல் போனதுடன், போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதற்கமைவாக இந்தபோட்டி சமநிலையில் நிறைவடைந்தது, இதன்மூலம் சிம்பாப்வே அணி 12 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியில் ஒன்றில் தோல்வியை தவிர்த்துள்ளது.

சிகந்தர் ரசா ஆட்ட நாயகன் விருதையும், தேவேந்திர பிஷூ தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு பூச்சியம் என்ற கணக்கில் மேற்கிந்தியதீவுகள் அணி கைப்பற்றியது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்