அவுஸ்ரேலியாவில் அதிரடி காட்டப்போகும் முதல் இலங்கை வீராங்கனை!!

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான பிக் பாஷ் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் விளையாட, இலங்கை மகளிர் அணியின் சகலதுறை வீராங்கனையான சமாரி அத்தப்பத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தொடரில் இடம்பெற்றுள்ள பிரபல அணியான மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் பிக் பாஷ் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் விளையாட, ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீராங்களை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த மகளிருக்கான உலகக்கிண்ண தொடரின் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான லீக் போட்டியில், சமாரி அத்தப்பத்து 143 பந்துகளுக்கு ஆட்டமிழக்காது 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்