அமெரிக்கத் தலைநகர் வொஷிங்ரனை தாக்கவல்ல அதிநவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா!! சர்வதேச நாடுகள் அதிர்ச்சி!!

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணைச் சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது உலக நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்று தான். ஹைட்ரஜன் ஆணு ஆயுத சோதனையில் வடகொரியா ஈடுபடுவதை உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியுடன் பார்த்தது வருகிறது.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கைவிடுமாறு அமெரிக்கா பலமுறை எச்சரித்து வந்தது.

ஆனால், வடகொரியாவோ ‘எங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். அதனால் அணு ஆயுத சோதனையை கைவிடமாட்டோம்’ என்று பகிரங்கமாக அறிவித்தது.

இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நாளுக்கு நாள் பகை உணர்வு அதிகரித்து வந்தது.

மேலும், அமெரிக்கா தனது நாட்டு போர்க்கப்பல்களை தென்கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்து போர் பயிற்சி மேற்கொண்டதும். பதிலுக்கு வடகொரியா மீண்டும் மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகிப்போனது.

இதனால் கடந்த செப்டம்பர் மாதம் வடகொரியாவின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்தது. இந்த பொருளாதாரத் தடையினால் அமெரிக்காவை நொடியில் சாம்பலாக்கி விடுவோம் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

இந்தநிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை சென்று தாக்கும் ‘கேஎன்- 20’ என்ற அதி நவீன ஏவுகணைச் சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்