அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மனித சங்கிலிப் போராட்டம்!!

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய கோரியும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அரசியல் கைதிகளுக்கெதிரான வழக்கை இடமாற்றியமைக்கு எதிராக அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும்,வவுனியா மேல் நீதி மன்றத்தில் வழக்கை விசாரணை செய்யகோரியும்,

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கெரியும் வவுனியா கச்சேரிக்கு முன்பாக கொட்டும் மழையில் மனித சங்கிலிப் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்த இப் போராட்டத்தில் வைத்தியர்கள், சைட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்தோர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், தமிழ் விருட்சத்தினர் என சுமார் 50 பேர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கடும் மழையையும் பொருட்படுத்தாது, இடம்பெற்ற இம் மனித சங்கிலி போராட்டம் சுமார் ஒரு மணிநேரமாக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இருந்து வைத்தியசாலை சுற்றுவட்டம் வரை கைகோர்த்தவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்