விடாது தொடரும் அடை மழையினால் ஸ்தம்பித்து போனது சென்னை!

சென்னையில்  தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமையின் காரணமாக சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தென் தமிழகத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக சென்னை நகரம் வெள்ள நீரில் மூழ்கிப் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்