கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் இராஜநாயகம் இயற்கை எய்தினார்!

கிளிநொச்சி மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தின் தலைவரும் பூநகரி மண்ணின்
 மைந்தனும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபருமாகிய தி.இராசநாயகம் அவர்கள் 02 இரவு 7.30 மணிக்கு யாழ் போதனா மருத்துவமனையில்
 இயற்கை எய்தினார்.

இராசநாயகம் அவர்கள் பல சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தார். குறிப்பாக மகாதேவ சுவாமிகள் இல்லத்தின் ஊடாக பல்வேறு சேவைகளை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அவரின் மறைவு தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பொது மக்கள், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்