கனடா விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 15 இல் இருந்து புதிய மாற்றம்!

கனடாவிற்கு கணவன் அல்லது மனைவி, பிள்ளைகளை ஸ்பொன்சர் நடவடிக்கை மூலம் அழைப்பதற்கான காலம் சுமார் 2 வருடங்களில் இருந்து 1 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த துரித நடவடிக்கை மூலம் 64 ஆயிரம் குடும்ப அங்கத்தவர்கள் கனடாவில் 2017 ம் ஆண்டு நிரந்தர குடியுரிமை பெறுவார்கள் என அறியப்படுகின்றது.

இதற்கான புதிய படிவங்கள் டிசம்பர் 15.2016 இல் இருந்து பாவனைக்கு வருகின்றது. ஆயினும் பழைய படிவங்கள் 2017 தை 31 வரையும் பாவிக்கலாம் என கனடிய அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை விண்ணப்பதாரருடைய குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணித்த பின்பே விசாவினை வழங்கும் என மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்