பாதிக்கப்பட்ட மூளையை மீட்கும் திறன் படைத்த மஜிக் காளான்!

சிகிச்சையளிக்க முடியாத, மன உளைச்சலால் அவதிப்படும் மக்களின் மூளையை, ஒருவித மயக்கத்தை மீட்டெடுக்கும் சக்தியை மஜிக் காளான்களில் காணப்படும் ஒரு வித இராசாயனம் கொண்டுள்ளதாக பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சிறியளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 19 நோயாளிகளுக்கு, சைகெடெலிக் மூலக்கூறு அடங்கிய சைலோசிபின் என்ற மருந்தின் ஒரு துளி கொடுக்கப்பட்டது.

நோயாளிகளில் பாதி பேருக்கு மன உளைச்சல் ஏற்படுவது நின்று, மூளை செயல்பாட்டில் அனுபவபூர்வமான மாற்றங்களை எதிர்கொள்ள தொடங்கினர். இந்நிலை கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு நீடித்துள்ளது.

எனினும் லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த குழு, மருத்துவரின் ஒப்புதலின்றி நோயாளிகள் சுயமாகவே மருந்தை எடுத்துகொள்ள கூடாது என்று கூறியிருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்