இனிவீதியில் மறைந்திருந்து தாவிப்பாய்ந்து சாரதிகளைப் பிடிக்க-பொலிஸாருக்கு தடை

வீதியில் மறைந்திருந்து ஒரே முறையில் தாவிப்பாய்ந்து வாகனச்சாரதிகளைப் பிடிக்க வேண்டாமெனப் பொலிஸாருக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை வாகனப்போக்குவரத்து குற்றவியல் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க விடுத்துள்ளார். வாக னப்போக்குவரத்துப் பொலிஸார் வாகனசாரதிகளுக்கு தெரியும் வகையில் வீதிகளில் கடமையில் இருக்கலாம்.

மறைந்திருந்து திடீரென வீதிக்கு வருவதால் சாரதிகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. பொலிஸாரின் இச்செய்கை குறி த்து முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இதனால் பொலிஸாரும் அபகீர்த்திக்கு உள்ளாவதாகவும் நந்தன முனசிங்க தெரிவித்து ள்ளார்.

இது தொடர்பாக பலமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் அநேக பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் மறைந்திருந்து வாகன ஓட்டி களைப் பிடித்து வழக்குத் தாக்கல் செய்வதாக அவர் தெரிவித்தார். இந்த விடயமாக சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட வகு ப்புக்களை நடத்தி அறிவூட்ட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்