அறிமுகமாகின்றது செல்பி பிரிட்ஜ்…

தொலைபேசி வைத்திருக்கும் பலரும், அதிகமாக இன்று பயன்படுத்தும் சொல் ‘செல்பி’ ஆகும்.

இதன் மூலம் தன்னைத் தானே விரும்பிய வகையில், விரும்பிய வடிவங்களில் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியடைகின்றனர்.

இந்த வரிசையில் ‘செல்பி பிரிட்ஜ்’ (குளிர்சாதனபெட்டி) தொழில்நுட்பமும் சேர்ந்துள்ளது.அமெரிக்காவில் இவ்வகை குளிர்சாதனபெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் நகரம் – கிராமம் வித்தியாசமின்றி பெரும்பாலான வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டி உள்ளது.

இந்த செல்பி பிரிட்ஜால், ஏற்கனவே இருக்கின்ற பொருளை மீண்டும் வாங்கி வந்து சிரமப்படுவது தவிர்க்கப்படுகிறது. அந்த பொருட்களுக்கான செலவும் குறைக்கப்படுகிறது.

நாம், காய்கறி பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்க, கடைக்குச் சென்றால், என்ன பொருட்கள் தேவை என்பதை ஏற்கனவே பார்த்து, சிட்டையில், குறிப்பெடுத்துக்கொண்டு கடையில் சென்று அதைப்பார்த்து வாங்குவோம்.

ஆனால் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த செல்பி பிரிட்ஜால், நாம் எந்த குறிப்பையும் கடைகளுக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை. அதே போல எந்த பொருட்களையும் மறந்து விட்டோம் என கவலைப்பட தேவையுமில்லை.

எப்படியெனில் இந்த நவீன பிரிட்ஜில் என்ன பொருட்கள் இருக்கிறது, இல்லை என்பதை, அதுவே செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை நமது தொலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அதனை பார்த்து, அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை வாங்கலாம்.

இதற்காக அந்த குளிர்சாதனபெட்டிக்குள், 3 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் நாம் குளிர்சாதனபெட்டியின் கதவை திறந்து பின் மூடும் போது, அது செல்பி எடுத்து அலைபேசிக்கு அனுப்பி விடுகின்றது.அமெரிக்காவில் இவ்வகை பிரிட்ஜ் விற்பனையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்