நொக்கியாவின் அதிரடி வெளியீடுகளினால் ஒதுங்கிப் போகும் சம்சுங்!

நொக்கியா தனது அடுத்த ஸ்மார்ட் தொலைபேசியான நொக்கியா 9 என்ற புதிய தொலைபேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஒருகாலத்தில் தொலைபேசி பாவனையில் அசைக்க முடியாத இடத்தினில் இருந்த நொக்கியா பல்வேறு நிறுவனங்களின் வருகையாலும், சம்சுங்கின் அதிரடி வளர்ச்சியாலும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன் பின்னர் மீண்டும் தொலைபேசி உலகில் தன் ஆதிக்கத்தினை நிலைநாட்ட முயன்று வரும் நொக்கியா அடுத்தடுத்து புதிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தனது அடுத்த அதிரடி உற்பத்தியான நோக்கியா 9 ஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட குறித்த தொலைபேசியில் 13 மெகாபிக்சல் கொண்ட இரு பின்பக்க கமராக்களும், துல்லியமாக படமெடுக்க 13 மொகாபிக்சல்கள் கொண்ட செல்பி கேமராவையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும், 4 ஜி.பி ரம் மட்டுமல்லாது, 64 மற்றும் 128 ஜி.பி சேமிப்பு வசதிகளும் நொக்கியா 9 ஸ்மார்ட் போனில் காணப்படுகின்றதும் ஓர் சிறப்பம்சமாகும்.

சம்சும் வெளியிட்ட புதிய ஸ்மார்ட் போன்களுக்கும், அப்பிளின் புது வரவுகளுக்கும் கூட இந்த நோக்கியா போட்டியாக அமையக் கூடும் என நொக்கியா பாவனையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்