மாத்தறையில் பாரிய சத்தத்துடன் விழுந்த விண் கல்!! தென்பகுதியில் பரபரப்பு!

விண்வெளியிலுள்ள கல்லொன்றே தென் பகுதியில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் வீழ்ந்துள்ளதாக ஆர்தர் சி கிளார்க் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் ஒரு பொருள் தென் பகுதியில் வீழ்ந்துள்ளதை அடுத்து அங்கு மக்களிடையே பாரிய பரப்பரப்பு நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து, ஆர்தர் சி கிளார்க் மையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்னவிடம் வினவியது.

பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான வெளிச்சத்துடன் செல்லும் ஒரு வகை பொருளொன்றை மக்கள் அவதானித்துள்ளமை குறித்து அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.குறித்த பொருள் தென் பகுதியை நோக்கி செல்வதனை கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அவதானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பொருள் குறுக்காக செல்வதனை போன்றே மக்கள் அவதானித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது விண்வெளியிலுள்ள கற்களாக இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

விண்வெளியிலுள்ள கற்கள் பூமிக்குள் பிரவேசிக்கும் போது பாரிய தீ பிளம்பும், சத்தமும் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார். இதற்கு பையர் போல் (தீ பந்து) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு வீழ்ந்ததாக கூறப்படுகின்ற தீ பந்தின் பாகங்கள் பூமியில் தென்படும் பட்சத்தில் அதனை தொடுவதற்கு எவரும் முயற்சிக்க வேண்டாம் எனஅவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறான தீபந்தின் பாகங்கள் காணப்படும் பட்சத்தில் அதற்கு நீர் படாத வண்ணம் ஏதேனும் பிளாஸ்ட்க் பொருளை கொண்டு மூடுமாறும் பேராசிரியர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் 0714-800-800 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்