அதிகளவிலான செக்ஸ் ரோபோக்களின் வருகையினால் தொழிலை இழக்கப் போகும் பாலியல் தொழிலாளிகள்!

உயிருள்ளவை போன்ற பெண் ரோபோக்கள் புதிது புதிதாக முளைப்பது , அவர்கள் தொழிலுக்கு உலை வைத்து விடுமோ என்ற கலக்கத்தை பாலியல் தொழிலாளிகளிடையே ஏற்படுத்தி இருக்கின்றது .

இவை பெரு விலையில் விற்கப்பட்டாலும்,  அதை வாங்குபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.  ஒரு பொத்தானை அழுத்தினால்  ரோபோ தன் ‘திருவிளையாடல்களை’ தொடங்கி விடும் வசதிகள் உள்ளன என்று அறியப்படுகின்றது .

ஆங்கிலேய இணையப் பத்திரிகையான நியூ ஸ்டாருக்கு ஒரு பாலியல் நட்சத்திரம் அளித்த பேட்டியில்  ‘இந்தப் புது வரவு சிவப்பு விளக்குப் பிராந்தியத்தோடு ஒரு புது விளையாட்டை ஆம்பித்துள்ளது ‘ என்று கூறி இருக்கிறார் .

ஒரு புதுத் தொழில் நுட்பம் சந்தைக்கு வந்துள்ளது . மக்கள் இதை விரும்ப ஆரம்பித்துள்ளார்கள் சந்தையில் பொருட்கள் நிறைய , விலை மலிவாக மாற , ஒவ்வொருவர் வீட்டில் உள்ள ஒன்றாக இது மாறலாம் ‘ என்று மேலும் கூறியுள்ளார் இந்தப் பெண் .

சமீப காலங்களில் செச்ஸ் ரோபோக்களின் உற்பத்திகள் அதிகரித்துள்ளன . புதிய புதிய தொழில் நுட்பங்களோடு வருடத்துக்கு வருடம் அறிமுகமாகும் ஐபோன்கள் போல , புதிய புதிய வசதிகளுடன், ஆண்களைக் குஷிப்படுத்த , புதிய புதிய தொழில் நுட்பங்களுடன் பெண் ரோபோக்களை அறிமுகம் செய்யத் தலைப்பட்டுள்ளார்கள்.

ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் ரோபோக்களையே தேடும் நிலை வருவது நிச்சயம் என்று அவதானிகள் கருதுகிறார்கள். இன்னொரு பாலியல் தொழிலாளி வேறு ஒரு கோணத்தில் இந்தப் பிரச்சினையை நோக்குவதாக கூறி இருக்கிறார்.

‘இந்தச் செயற்கை நுட்பத்தின் ஆளுமை அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை . உண்மையைச் சொல்லப் போனால் , ஒருவருக்குள்ள வேட்கையை மேலும் தூண்டி , எங்களிடம் ஆண்கள் ஓடிவர இவை உதவலாம் ‘என்று இவர் அபிப்பிராயப்பட்டுள்ளார் அமேசன். 1300பவுண்ட்ஸ் தொகைக்கு , இணையத்தில் செக்ஸ் ரோபோக்களை விற்று வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்