நிலவும் பூமியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நாள் தொலைவில் இல்லை!!- எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!

அந்தரத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் பூமிக் கிரகத்தோடு அதன் துணைக் கோளான நிலவு மோதல் ஒன்றை நடத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் 4 சென்றிமீற்றர்கள் அளவு நிலவானது பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு விலகில் செல்லும் நிலவானது இறுதியில் பூமியின் சுழற்சியினை உள்வாங்கி, தற்போது அது கொண்டுள்ள சுற்றுப்பாதை இயக்கத்தினை துண்டித்துக்கொண்டு பூமியுடன் மோதும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள, இதாஹோ பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானியான ஜேசன் பர்ன்ஸ், ​​”பூமி மற்றும் சந்திர மண்டலத்தில் இறுதிக்கட்ட அலைப் பரிணாம வளர்ச்சியானது (tidal evolution) ஒரு கட்டத்தில் நிலவுக் கிரகத்தின் தூண்டுதலாக மாற்றம் பெற்றுவிடும். அதன் அடுத்தகட்ட விளைவாக பூமியும் நிலவும் மோதிக்கொண்டு பேரழிவு மோதல் ஒன்று ஏற்படும்” என கூறியுள்ளார்.

எனினும் இந்த சந்தர்ப்பம் ஏற்பட இன்னும் பல வருடகாலங்கள் உண்டு எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்