பைத்தியம் பிடிக்கும் மாயையை உருவாக்கும் அதி நவீன அறை!

உலகிலேயே மிகவும் அமைதியான அறை ஒன்று அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா பகுதியிலேயே 9 decibel room எனப்படும் இந்த அமைதியறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையானது சப்த அலைகளை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காரணத்தினால், இந்த அறைக்குள் செல்லும் ஒருவருடைய நுரையீரல் தொழிற்படும் ஓசை கூட வெளியே கேட்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த அறையில் காணப்படும் இருள் மட்டும் அசாதாரணமான அமைதியின் காரணமாக இதற்குள் செல்பவர்களுக்கு இனம் புரியாத பய உணர்வு உருவாக்கப்படுகின்றது.

நாசாவின் விண்வெளி வீரர்களை சோதித்துப் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படும் இந்த அறையில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் மட்டுமே இதுவரையில் ஒருவர் செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த ஓட்டம், இதயத்துடிப்பும் கூட தெளிவாக உணரவைக்கும் இந்த அறையில் உள்ளே செல்பவர்களுக்கு பைத்தியம் உண்டாக்கும் வகையில் ஓர் மாயை உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்