நாடு திரும்பிய இலங்கை அணியினர்! பாரிய வரவேற்பு வழங்கிய ரசிகர்கள்…..

அவுஸ்திரேலிய மண்ணில் T 20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, வெற்றிக்களிப்புடன் நாடு திரும்பியுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி வீரர்களுக்கு இலங்கை ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடிய இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் போட்டியை தனதாக்கியது.

பல போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி சோபிக்க தவறியமை காரணமாக விரக்தியில் இருந்த ரசிகர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர்.

இந்த வரவேற்பினை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் அணியின் பயிற்சியாளர் கிரேம் பொர்ட் முகாமையாளர் ரஞ்சித் பிரனாந்து போன்று அசேல குணரட்ன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அசேல , தென்னாபிரிக்கா சுற்றின் போதான அனுபவம் , அவுஸ்திரேலியா சுற்றில் தான் சிறந்து விளையாட வழிவகுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

விசேடமாக தென்னாபிரிக்கா பிட்ச் மற்றும் மைதான அமைப்பை போன்று அவுஸ்திரேலியாவிலும் காணப்பட்டதால் தனக்கு சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்த முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்